எழுத்தும் மொழியும்
…..
எழுத்துக்கள்:
மனதில்
உள்ள
அல்லது
தோன்றும்
எண்ணங்களின்
பிரதிபலிப்பே
எழுத்தின்
வடிவமாகும்,,,
எழுத்துக்கள்
அழகாகிறது
நல்
வார்த்தைகளின் மூலம்,,,
எழுத்துக்கள்
ஆழமானவை,
அவை
உணர்ச்சிகளின்
வெளிப்பாடு,,,
மிகச்சிறந்த
கூர்மையான
ஆயுதம் என
எழுத்துகளை
கூறலாம்,,,
பாரதியாரும்,
பாரதிதாசனும்
இன்ன
பிற கவிஞர்களும்
எழுத்துகளின்
மூலமே புரட்சி செய்தார்கள்,,,
பழக
பழக
பாலும்
புளிக்கும் என்பார்கள்,
ஏனோ
எழுத எழுத
வார்த்தைகள்
புளிப்பதில்லை,
மாறாக
இன்னும் இனிக்கவே செய்கிறது,,,
வைரம்
பட்டை தீட்டீய
பின்பே ஜொலிக்கும்,
எழுத்துகளும்
அப்படிதான்…..
நல்ல வார்த்தைகளாலே
மெருகேற்றப்படும்…
அழிந்து போகா
பொக்கிசங்கள்
எழுத்துக்களே….
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மொழி,,,,,,
மொழி எனும்
போதே
தமிழ் தான்
சிறந்தது,
நம் தமிழ் மொழிக்கு
ஈடு இணை உலகில்
இல்லை,
உலகின் தொன்மையான
மொழி
தமிழ் தான்,,,,,,,
தமிழ் என்றாலே
அழகு தான்,
அதிலும் “ழ”
எனும் எழுத்து
இன்னும் அழகு,
தமிழை நம் முன்னோர்
காத்தது மட்டுமல்லாமல்,
போற்றி வளர்த்தனர்,,,,,,,
நாம் அதை வளர்க்கவிட்டாலும்
அழிக்காமல்
இருப்போம்,,,,,,
தமிழின் பெருமையை…..
*****************************************************************************
தொடர்ந்து எழுதவேண்டும் என்ற முயற்சியுடன்...வலைப்பதிவின் ஆரம்பம் இது........