A.P.J. அப்துல் கலாம் ஐயா,,,,,,,,



அழகுக்காக
வண்ணம் பூசவில்லை,

பதவிக்காக
பாசாங்கு காட்டவில்லை,

பணத்துக்கு
விலை போகவில்லை,

புகழுக்கு 
மயங்கவில்லை,

உதவிக்கு 
தயங்கவில்லை,

சாதி மதம் 
பேதம் பார்த்ததில்லை,

பழகுவதற்கு
கஞ்சம் காட்டவில்லை,

போதிக்க 
மறந்ததில்லை,

அன்பிற்கும், அறிவிற்கும்
பிறப்பிடம் நீர் ஆனிரோ,

மண்ணைவிட்டு
மறைந்த போதும்
நீர் என்றுமே 
எம் மனதை விட்டு 
மறைய போவதில்லை, 

நீர் விட்டுச்சென்றது
மக்கும் குப்பைகளை அல்ல,
மண்ணை பிளக்கும்
விதை போல நல்ல கருத்துக்களை,
கடைசி மூச்சுவரை 
விதைத்துச் சென்றாயே.......

எவ்ளோ கூறினாலும்
தீரவில்லை உந்தன் பெருமைகள்....




*******************************************************************************************

இந்த வார்த்தைகள்  A.P.J. அப்துல் கலாம் ஐயா,,,,,,,, உங்களுக்கு எனது சமர்ப்பணம்........



No comments:

Post a Comment

தமழர்களின் வீர விளையாட்டுகள்

  வீர விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல .                         அவை       நம் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் அடையா...