வார்த்தை முக்கியம்
அமைச்சரே…
மனிதனின் தரம்
பணம்,கல்வி, திறமை
போன்றவை நிர்ணயம் செய்தாலும்,
உண்மையான தரம் அவனிடம் இருந்து
வார்த்தைகளில்
தான் ஒளிந்துள்ளது,
வார்த்தைகளே அவர்களின்
செயலை தீர்மானிக்கும்,
ஒருத்தர்கிட்ட
10 நிமிசம் பேசினாலே
முடிஞ்ச அளவு அவங்க குணத்தை கண்டுபிடிச்சிடலாம்,
அதனால வார்த்தைகளை
கையாள்வதில் கவனம் ரொம்ப முக்கியம்,
யார் ஒருவர் எந்த
இக்கட்டான சூழ்நிலையிலேயும்,
தரம் குறைவான வார்த்தைகளை உபயோகிக்காம இருக்காங்களோ
அவங்களே
குணத்தால் பெரிய மனிதன்,
நம்மள யாராவது தரம் குறைவா பேசினாலும்,
பதிலுக்கு நாமும் தர
குறைவா பேசினா
அங்கு தாழ்ந்து போவது நம் தரமும் தான்,
இறங்கி பேச கொஞ்சம்
நேரம் போதும் ஆனா அது நாம இல்லை,
“ கெட்டாலும் மேன்மக்கள்
மேன்மக்களே “
அதை பொய்யாக்கிட கூடாது,
கோபப்படணும்,
ஆனா
வார்த்தைகளை கையாள்வதில் கவனம் தேவை.
ஆறுதலா பேசும்
வார்த்தைகள்
ஒருவரை துன்பத்திலிருந்து எளிதில் விடுவிக்கும்…..
No comments:
Post a Comment